அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவின் ரோட் தீவின் தலைநகர் பிராவிடென்சில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறைக் கட்டடம் அருகே மர்மநபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சந்தேக நபர் தலைமறைவாக உள்ளார். தாக்குதல் நடத்தியவர் கருப்பு நிற உடை அணிந்த ஒரு ஆண் என்றும், அவர் தப்பி ஓடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பிரவுன் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழங்களில் ஒன்று. ஏழு மாடி கட்டடத்தில் பொறியியல் மற்றும் இயற்பியல் துறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட லேப்கள் உள்ளன.
பல்கலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்.பி.ஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.










