ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் மார்க் டி. எஸ்பருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.தொலைபேசி மூலம் நேற்று இந்தக் கலந்துரையாடல் நடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் விடயத்தில் இலங்கை அரசு முன்னெடுத்துள்ள வெற்றிகரமான செயற்பாடுகளுக்கும், பொதுத்தேர் தலில் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றுக்கொண்ட வெற்றிக்கும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இ ந் த க் க ல ந் து ரையாடலில் இலங்கை – அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான நட்புறவு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உறுதியான அரசு ஒன்று உருவாகியுள்ள நிலையில், இன நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களில் அரசுகவனம் செலுத்த வேண்டும் என்ற காரணியையும் அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்து – பசுபிக் வலய நாடுக ளுக்கு இடையிலான இறையாண்மையுடனான நட்புறவைப் பலப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள இரு தரப்பினரும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள், இரு தரப்புப் பாதுகாப்புச் செயற்பாடுகள், இராணுவம் மற்றும் கடற்படை கூட்டு வேலைத்திட்டங்கள் என்பனகுறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இதில் பயங்கரவாதச் செயற்பாடு களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடை யிலான பாதுகாப்பு நட்புறவைப் பலப்படுத்துதல், இரு இருதரப்பு இணக்கப்பாட்டு நலன்களை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.