” அமைச்சரவைப் பேச்சாளர் பதவி தனக்கு வேண்டாம்.” – என்று அமைச்சர் பந்துல குணவர்தன பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியை உரிய வகையில் முன்னெடுப்பதே தனது இலக்கு எனவும், எனவே, மேலதிக பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தபோதே இந்த விடயத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர் இடைக்கால அரசாங்கத்தின் இணை அமைச்சரவைப் பேச்சாளர்களாக பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரண ஆகியோர் செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறையும் இருவரையும் நியமிப்பதற்கே திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே பதவியை பந்துல நிராகரித்துள்ளார் என கூறப்படுகின்றது.