அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவாரா விஜயதாச?

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுமாறு அமைச்சர்கள் சிலரும், மொட்டு கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கும், எதிரணி அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்கும் வகையிலும் செயற்படுவதாலேயே விஜயதாச தொடர்பில் மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு ஜனாதிபதியிடமிருந்து உடனடி பதில் வழங்கப்படவில்லை.

“ தன்னை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ரொஷான் ரணசிங்க செயற்பட்டார், அதன்மூலம் அரசியல் இலாபம் பெற முற்பட்டார். அதேபோல விஜயதாசவையும் நீக்கினால் அவரும் பிரச்சாரம் தேடலாம். எனவே, நேரம் வரும்போது உரிய முடிவை எடுக்கலாம்.” – என ஜனாதிபதி கூறியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

Related Articles

Latest Articles