பிரதமர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என முன்னாள் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிய அரசாங்கத்தில் மட்டுப்படுத்தப்பட்ட சிறி அமைச்சரவையொன்றே அமைக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.