அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு தாக்கல்!

திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பான , அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறுகோரி உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளரே , இந்த அடிப்டை உரிமை மனுவை சட்டத்தரணி, சுனில் வட்டகல ஊடாக தாக்கல் செய்துள்ளார்.

நிதி அமைச்சர், வலுசக்தி அமைச்சர், சட்டா அதிபர், ஜனாதிபதி செயலாளர் உட்பட 47 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான ஒப்பந்தம் நேற்றிரவு கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles