அமைச்சரவை விரைவில் மறுசீரமைக்கப்படுமா?

அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா என்பது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுப்பார். அதற்கான அதிகாரம் அவருக்கே இருக்கின்றது. தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்படும்.

அதேபோல பஸில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது தொடர்பிலும் இறுதி முடிவு இல்லை. அது தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னரே உரிய அறிவிப்பை விடுக்க முடியும்.

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles