அமைச்சர் நாமல் ராஜபக்ச நாளை யாழ். விஜயம்

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, நாளை (09) யாழ். மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

நாமல் ராஜபக்ச அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது யாழ். விஜயம் அமையவுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், அமைச்சரின் வருகையை முன்னிட்டு எவ்வித விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படமாட்டாது.

Related Articles

Latest Articles