” அமைச்சு பதவிக்காக அலையவில்லை” – மஹிந்தானந்த

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மொட்டு கட்சி எம்.பியான மஹிந்தானந்த அளுத்கமகே, கட்சியின் சார்பில் இந்த பாராட்டை தெரிவித்தார்.

” சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் கிடைத்துள்ள நிலையில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடம் இருந்தும் உதவிகள் கிட்டும் என நம்புகின்றோம். அதன்மூலம் நாட்டு பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கின்றோம்.

மக்களின் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்று எமக்கு பதவிகள் வழங்கப்பட்டால் ஏற்போம். மாறாக அமைச்சு பதவிக்காக அலைந்துதிரியவில்லை.” – எனவும் மஹிந்தானந்த எம்.பி. குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles