அமைச்சு பதவியை ஏற்பாரா சம்பிக்க?

நாடாளுமன்றத்தில் தான் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மனசாட்சியின் பிரகாரமே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் அறிவித்தார்.

அதேவேளை, தற்போதைய அரசில் அமைச்சு பதவியை ஏற்கபோவதில்லை எனவும் சம்பிக்க ரணவக்க திட்டவட்டமாக அறிவித்தார்.

43 ஆம் படையணி எனும் அரசியல் இயக்கத்தின் பிரதானியாக சம்பிக்க ரணவக்க செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles