‘அமைச்சு பதவி கிடைக்காததால் கவலையடைகிறேன்’ – எஸ்.பி.

” எனக்கு அமைச்சு பதவி கிடைக்காமை கவலையாகத்தான் உள்ளது. ஆனால் பதவியை தருமாறு வலிந்துசென்று கேட்கமாட்டேன். உரிய அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்பேன்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான் என்னை அக்கட்சிக்கு அழைத்தது. அவ்வாறு அழைத்துவிட்டு உரிய இடம் வழங்கப்படாமை வேதனையளிக்கின்றது. அமைச்சு பதவி வழங்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரிடம்தான் கேள்வி கேட்க வேண்டும்.

என்னை அரசியலில் இருந்து எவரும் ஓரங்கட்ட முடியாது. அரசியலில் இருந்து விலகுவதானால் அது தொடர்பான முடிவை நானே எடுக்க வேண்டும். அதேபோல நீண்டகாலம் அரசியலில் நீடிக்கும் எதிர்ப்பார்ப்பும் இல்லை.” – என்றும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles