அமைச்சு பதவி கிடைக்காததால் மொட்டு கட்சியினர் அதிருப்தியா?

அமைச்சு பதவி கிடைக்காததால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர் என வெளியாகும் தகவல்களை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நிராகரித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 12 பேர்வரை அதிருப்தியில் உள்ளனர் எனவும், அவர்கள் எதிரணியில் அமரவுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே, அந்த தகவல் உண்மை அல்ல என ஜோன்ஸடன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளபோதிலும் மக்கள் நலன்கருதி அமைதிகாப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles