இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி வருமாறு,
” அம்மா… இச்சொல்லில் புதைந்திருப்பது ஆயிரமாயிரம் அர்த்தங்களும் தொணிகளும் … அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.
பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாரமாக, தோழியாக, பாட்டியாக, ஆசானாக என எத்தனை பாத்திரங்களில் வலம் வந்தாலும் ‘அன்னை’ என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான பாத்திரத்தை வகிக்கிறது. தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு.
அம்மா என்ற சொல்லை உச்சாிக்கும் போது நம் அனைவருடைய உள்ளங்களும் உணா்ச்சி மிகுதியால் தழுதழுக்கின்றன.
அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும்.
