நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு மற்றும் விலையேற்றத்திற்கும் நிரந்த தீர்வு கோரி நாவலப்பிட்டிய நகரத்தில் ஆர்ப்பாடமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாவலப்பிட்டிய நகரை சூழ்ந்த பிரதேசவாசிகளால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மாலை 5 மணிவரை தொடர்ந்தது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளையும் சத்தங்களையும் எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எரிவாயு, எரிபொருள், மண்ணெண்ணெய், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என்றும் இல்லாதவாறு பொருட்கள் விலை உயர்வு சம்பந்தமான பதாகைகள் ஏந்தி கோசம் எழுப்பிய வாரு நகரில் மத்தியில் தங்களின் போராட்டத்தை நடத்தினர்.
மஸ்கெலியா நிருபர் பெருமாள்!










