அரசாங்கத்துக்கு அபாய சங்கு ஊதியது தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம்!

புதிய அரசியலமைப்பை இயற்றும்போது 13 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கவேண்டும் என்று கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான ‘தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம்’ வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் இணைப்பாளரான கலாநிதி குணதாச அமரசேகர, மேலும் கூறியவை வருமாறு,

” புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கே நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கினர். எனவே, கூடியவிரைவில் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அரசியலமைப்பு எப்போது அமுலுக்கு வரும் என்பது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன. இதனை ஏற்கமுடியாது. இதற்கான கால எல்லையை அரசாங்கம் மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.

அதேபோல் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும் விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தவேண்டும். குறிப்பாக இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படவேண்டும். இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்கவேண்டும். புதிய அரசியலமைப்பு இயற்றப்படும்வரை நாட்டில் எந்தவொரு தேர்தலும் நடத்தப்படக்கூடாது. 13 நீக்கப்படும் என்ற உறுதிமொழியையும் அரசாங்கம் வழங்கவேண்டும். ” – என்றார்.

Related Articles

Latest Articles