அரசாங்கத்துக்கு எதிராக தீப்பந்தமேந்தி போராட்டம் முன்னெடுப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச்செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் இன்று தீப்பந்தமேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

நாட்டில் அரசாங்க பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது எனவும், இதன் வெளிப்படாகவே சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என  போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் சஜித் கருத்து வெளியிட்டார்.

மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன, சிறைச்சாலை சம்பவத்துக்கு அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles