அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் அரச ஊழியர்கள் போராட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உணவு ஓய்வு நேர வேளையில் அட்டன் பிரதேசத்தில் உள்ள அரச ஊழியர்கள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்வி துறைசார்ந்த ஊழியர்கள், தபால் திணைக்கள ஊழியர்கள், டிக்ககோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள், வைத்தியர்கள் சிற்றூழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கல்வி மற்றும் ஏனைய அரச ஊழியர்கள்களின் ஆர்ப்பாட்டம் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்தது. ஆர்ப்பாட்டகாரர்கள் உலகத்தின் முன் தாய் நாட்டை கேவலமாக்காதே,பசிக்கு நிறம்,மதம் கிடையாது,விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சி படுத்திய வண்ணம்,ஊர்வலமாக வந்து மணிக்கூட்டு கோபுரத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள்,சிற்றூழியர்கள் உட்பட வைத்தியசாலையில் பணிபுரியம் ஊழியர்கள் டீசல் இல்லை,கவலைக்கிடமான நிலையில் இலவச சுகாதார  சேவை, சுகாதார சேவையை பாதுகாப்போம்,பிள்ளைகளின் கல்வியினை பாதுகாப்போம். போன்ற வாசகங்களை எழுத்திய சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம், கோசமிட்டனர்.

(க.கிஷாந்தன்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles