அரசாங்கத்துடன் இணைகிறாரா ராதா? வெளியானது உண்மைத் தகவல்!

தான் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நான் அரசாங்கத்துடன் இணைவதாக கூறுவோர் அது தொடர்பான பேச்சுவார்த்தை எப்போது என கூறினால் அதற்கு பதிலளிப்பேன்.” – எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், சம்பள உயர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் பெருந்தோட்டக் கம்பனிகளின் சார்பில் ஒருவரே பங்கேற்றுள்ளார். சம்பள பேச்சுவார்த்தையை இழத்தடிப்பு செய்யும் நோக்கில் கம்பனிகள் இவ்வாறு செயற்படகூடும். அதாவது பேச்சுவார்த்தையை இழுத்தடிக்க கம்பனிகள் இவ்வாறு சூட்சமமான வேலைகளில் ஈடுபடுகின்றன. அதாவது அரசாங்கத்தின் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இவ்வாறு 1000 கொடுப்பதை தவிர்க்க இவ்வாறு செயற்படலாம்.” – என்று குறிப்பிட்டார்.

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தொடர்பிலும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இங்கு கருத்து தெரிவித்தார்.

“அரவிந்த கமார் தொடர்பில் மக்களின் தீர்மானத்திற்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்படும். நாம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு அவருடைய பதிலும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த விடயம் குறித்து மீள பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்.

இலங்கையில் உள்ள இரண்டு கட்சிகள் 20 ஐ ஆதரித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளன. ஆகவே அது தொடர்பில் பேசாது மலையக மக்கள் முன்னணியின் உள்விவகாரத்தில் மாத்திரம் தலையிடுவது எந்த வகையில் நியாயம்?  ” – என்றார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles