அரசாங்கத்தையும், ஆளுநரையும் புனர்வாழ்வளிக்க கந்தக்காட்டுக்கு அனுப்ப வேண்டும்-கம்மன்பில

நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் அடிமையாகியுள்ளார். அதே போல் கடனைப் பெறுவதிலும் எங்களது அரசாங்கம் அடிமையாகியுள்ளது. எனவே அரசாங்கத்தையும், ஆளுநரையும் புனர்வாழ்வளிக்க கந்தக்காட்டுக்கு அனுப்ப வேண்டும் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். வரவு – செலவு திட்டம் மீதான நேற்றைய (17) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிகளவான நாணயத்தாள்களை அச்சிட்டதால் ஏற்பட்ட பணவீக்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியதாக மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார். அப்படிக்கூறிய அவரே, வரலாற்றில் அதிகளவான நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளார்.

பாதிப்புகளை அறிந்து வைத்திருந்தாலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களால் அதனைக் கைவிட முடியாது. அதுபோலதான் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு அடிமையாகியுள்ளார். அதுபோல அரசாங்கமும் கடனைப் பெறுவதற்கு அடிமையாகியிருக்கிறது. எனவே, மத்திய வங்கியின் ஆளுநரையும், எங்களது அரசாங்கத்தையும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி புனர்வாழ்வளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles