ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு ஃபைசர் தடுப்பூசி வழங்க அரசாங்கமே தீர்மானித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கமைய குறித்த தடுப்பூசி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறுிப்பிட்டார்.
எந்த தடுப்பூசி, எந்த பிரதேசத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி தலைமையிலான கொவிட் நெருக்கடிகளை சமாளிக்கும் படையணியே எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசியை நிர்வகிக்கும் எந்த நாடும் இந்த தடுப்பூசி தான் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்காது என்று அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.