அரசிடம் சஜித் தொடுத்துள்ள மூன்று கேள்வி கணைகள்!

நாட்டில் எதற்காக அவசரநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது என்பதற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” நாட்டில் திடீரென அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. சமூகவலைத்தளங்களும் முடக்கப்பட்டன. இவற்றுக்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

நாட்டில் நிதி அமைச்சர் இல்லை, திறைசேரி செயலாளர் பதவி விலகியுள்ளார். ஏன் இந்த நிலைமை” என்றார்.

Related Articles

Latest Articles