செயற்பாட்டு அரசியலில் இருந்து தான் ஒதுங்கவுள்ளதாகவும், எந்தவொரு தேர்தலிலும் இனி போட்டியிடமாட்டார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஊழல், மோசடியற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு நான் ஒத்துழைப்பு வழங்குவேன். எனக்கு எந்தவொரு பதவியும் தேவையில்லை. இனி தேர்தல்களில் போட்டியிடப்போவதும் இல்லை. 50 வருடங்கள் நாடாளுமன்றத்தில் இருந்துவிட்டேன். ஜனாதிபதி பதவியையும் வகித்துவிட்டேன்.
அரச மாளிகையில் இருந்து வெளியேற தயாராகி வருகின்றேன். புதிய வீட்டில் ஏற்பாட்டு நடவடிக்கை முடிந்ததும் சென்றுவிடுவேன்.” – என்றார்.










