அரசியல்வாதி முருகையா ரவிந்திரன் கைது!

ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் முருகையா ரவிந்திரன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles