அரசியல் களத்தில் ஆட சஜித்துடன் டில்ஷான் இணைப்பாட்டம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சகலதுறை ஆட்டக்காரர் திலகரத்ன டில்ஷான், ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

சுமார் 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய திலகரத்ன டில்ஷான், தலைமைப் பதவியையும் வகித்துள்ளார்.

திலகரத்ன டில்ஷான் தனது குடும்பத்தாருடன் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles