வலுவானதொரு பொது எதிரணியைக் கட்டியெழுப்புவதற்குரிய அழைப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது.
இதன்ஓர் அங்கமாக ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சி தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிரணி தலைவர்கள் பங்கேற்கும் வகையில் ஐதேக தலைமையகமான சிறிகொத்தவில் அல்லாமல் பொதுவானதொரு இடத்தில் மாநாட்டை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும், எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பதற்குரிய சாத்தியம் உள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ரணில் மற்றும் சஜித்துக்கிடையிலான அரசியல் உறவு 2020 ஆம் ஆண்டு முறிந்தது. எனினும், ரணில் கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கான சஜித் முன்னிலையானார். இதனையடுத்து இருவரும் தற்போது ஐக்கியமாகியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.