தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (8) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியொருவர் தெரிவித்தார்.
வடக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாக வடக்கு மாகாண தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி கடந்த மாதம் பேச்சு நடத்தினார். இரண்டாம் சுற்று பேச்சில் கிழக்கு மாகாண தமிழ் எம்.பிக்களுடன் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
மேற்படி சந்திப்புகளின்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும் காத்திரமான முடிவுகள் எட்டப்படவில்லை.
இந்நிலையிலேயே கூட்டமைப்பினருடன் நாளை சந்திப்பு இடம்பெறவுள்ளது.
