‘அரசியல் தீர்வு’ – மலையக கட்சிகளுடன் பேச்சு நடத்த கூட்டமைப்பு திட்டம்

மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருவதாக அதன் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினை உருவாக்குவதற்கு பிரயத்தனம் செய்துவரும்நிலையில், தென்னாபிரிக்காவில் இடம்பெற்றது போன்றுதமிழ் மக்களின் அபிலாகைளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரசமைப்பின் ஊடாக நிரந்தரமான தீர்வுகாணப்பட்டதன் பின்னரே ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என்றும்அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஎதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் தமிழ் தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். இந்த அழைப்பு தொடர்பில் ஏற்கனவே தமிழ்த் தலைவர்கள், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் கூடிப் பேசிவிட்ட நிலையில், அடுத்த கட்டநடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

அதேநேரம், இலங்கையில் உள்ள இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை களைவதற்காக உண்மை மற்றும்நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிர மாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோவுடன் இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தார்.

தொடர்ந்து, தென்னாபிரிக்காவின்துறை சார்ந்த நிபுணர்கள் குழுவொன்றுடன் வெளிவிவகார அமைச்சர் ஜனாதி பதி சட்டத்தரணி அலி சப்ரி கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, சிவில் அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.

அதனையடுத்து, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவும்,குறித்த நிபுணர்கள் குழுவினரை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில் சுமந்திரனும் பங்குபற்றியிருந்தார்.இந்நிலையில் மேற்படி விடயங்கள் சம்பந்தமாக கருத்து வெளியிடுகையி லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மலையக, முஸ்லிம் தரப்புக்களுடன் பேச்சு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான அழைப்பினை விடுத்துள்ளதோடு 12ஆம்திகதிக்குப் பின்னர் அப்பேச்சுக்களை ஆரம்பிப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் கூட்டமைப் பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, மூன்று முக்கிய விடயங்களையும் முன்வைத்துள்ளனர்.

அவ்விடயங்கள் தொடர்பில் ஜனாதி பதி ரணில் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அதேபோன்று, பேச்சுவார்ததையை முன்னெடுப்பதற்கான காலம் இன்னமும் உறுதியாகவில்லை. இந்தநிலையில், அண்மைய நாள்களில் ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகளில் எமக்கு சில சந்தேகங்கள் உள்ளன. இருப்பினும், எமது பக்கத்திலிருந்து பேச் சுக்காக கிடைத்த சந்தர்ப்பத்தினை வீணடித்தவர்கள் என்ற பழியை சுமப்பதற்கு தயாரில்லாத நிலையில் ஆயத்தங்களை முன்னெடுக்கின்றோம்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர் பில் இறுதியாக அரசமைப்பு சபை உரு வாக்கப்பட்டு தயாரித்த இடைக்கால அறிக்கை வரைவில் பல விடயங்கள் உள்ளன. ஆகவே, இதயசுத்தியுடன் அதற்கான பேச்சுக்களும் நடவடிக்கை களும் முன்னெடுக்கப்பட்டால், ஓரிரு அமர்வுகளிலேயே இறுதித் தீர்வு வடிவத் தினை எட்டிவிடலாம். அது ஒருபுறம் இருக்கையில், நாம் எமது சகோதர இனங்களான மலைய மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளோம். அதற்கான நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் அச்செயற்பாடு இடம்பெறவுள்ளது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles