” இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினர்களுக்கு அரசியல் ரீதியில் இருந்த தொடர்புகள் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசியல்வாதிகளின் ஆசிர்வாதம் இருந்ததால்தான் இந்நாட்டில் பாதாளக்குழுக்கள் வளர்ச்சி கண்டன. தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக அரசியல்வாதிகள் பாதாளக்குழுக்களை பயன்படுத்தியுள்ளனர்.
பாதாள குழுக்களின் சொத்துகள் அரசியல் வாதிகளின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைக்கு சிஐடிக்கு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
பாதாள குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய காலம் உதயமாகியுள்ளது. அதனை நாம் நிச்சயம் செய்வோம்.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் பிரகாரம், பாதாள குழுக்களில் உள்ள ஏனைய உறுப்பினர்களை கைது செய்ய முடியும்.” – என்றார்.