அரசுக்கு எதிரான சஜித் அணியின் ஆட்டம் தொடர்கிறது!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில், அரசுக்கு எதிராக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குருணாகலை, கல்கமுவ பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட போராட்டக்காரர்கள், உடன் நிவாரணம் வழங்குமாறும் வலியுறுத்தினர்.

அத்துடன், விவசாய நடவடிக்கைக்கு தேவையான உரத்தை வழங்குமாறு போராட்டத்தில் பங்கேற்றிருந்த விவசாயிகள் வலியுறுத்தினர்.

Related Articles

Latest Articles