ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணையவுள்ளதாக வெளியாகிவரும் தகவல்களை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சுதந்திர மக்கள் சபையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அரசுடன் இணையவுள்ளீர்களா என டலஸ், எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, தனக்கு அவ்வாறானதொரு எண்ணம் இல்லை எனவும், போலியான தகவல்களே பரப்பட்டுவருகின்றன எனவும் மைத்திரி பதிலளித்துள்ளார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
