அரசுடன் இணைய சுபநேரம் பார்க்கிறதா கூட்டணி? மனோ, திகா வழங்கியுள்ள பதில்….!

ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருந்து விலகி, அரசுடன் இணையும் எண்ணம் இல்லை – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் அரசுடன் இணைந்தால் மகிழ்ச்சி. மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் – என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அரசுடன் இணையும் திட்டம் இல்லை என்று திகாம்பரம் எம்.பி. குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசுடன் இணையவுள்ளனர் என கடந்த இரு வருடங்களாக தகவல்கள் பரப்பட்டுவந்தாலும் அவ்வாறு நடக்கவில்லை எனவும் திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, அமைச்சர் கஞ்சனவின் இந்த கருத்தை கலாய்க்கும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று காலை தனது முகநூலில் பதிவொன்றை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Latest Articles