மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கமும், பெருந்தோட்டக் கம்பனிகளும் சூழ்ச்சி செய்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
“ தேர்தல் நெருங்குகின்றது, தொழிற்சங்கங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. எனவே, சம்பள உயர்வு தொடர்பில் நாங்கள் அறிவிப்பு விடுகின்றோம், முடியாது எனக் கூறி நீங்கள் நீதிமன்றத்தை நாடுங்கள் என கம்பனிகளிடம் அரசாங்கம் கூறியிருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.
எனவே, இந்த தேர்தல் குண்டுக்குள் தொழிற்சங்கங்கள் சிக்கிவிடக்கூடாது.” – எனவும் திகாம்பரம் தெரிவித்தார்.
