ஜெனிவா மாநாட்டில் பங்கேற்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்தால், நாட்டுக்காக பங்கேற்று கருத்துகளை முன்வைப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உணவு, மருந்து விநியோகம் தடுப்பு உட்பட இலங்கை தொடர்பான 8 போர்க் குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதை நாம் ஜெனிவா தொடரில் நிரூபித்துள்ளோம். ஆவணங்களையும் கையளித்திருந்தேன்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவா தொடர் ஆரம்பமாகின்றது. இதன்போது இலங்கை தொடர்பான போர்க் குற்றச்சாட்டுகளை வெளிவிவகார அமைச்சு நிராகரிக்க வேண்டும்.
ஜெனிவா விவகாரம் தொடர்பில் அனுபவமுள்ள அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சில் இருக்கின்றனர். சிலவேளை எனக்கு அழைப்பு விடுத்தால் நானும் பங்கேற்க தயார். வெளிவிவகார அமைச்சுடனும் இது பற்றி பேச்சு நடத்தலாம்.
ஆனால் 46/1 தீர்மானத்தின் பாரதூரத்தன்மை தற்போதைய அரசாங்கத்தக்கு புரியவில்லைபோல் தெரிகின்றது. சாட்சி திரட்டும் நடவடிக்கைகூட இடம்பெறுகின்றது.” – என்றார்.










