“மார்ச் 31 ஆம் திகதி மகா சங்கத்தினர் அபயராம விகாரையில் ஒன்றுகூடவுள்ளனர். இதன்போது அரசு தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படும்.”
– இவ்வாறு அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டு மக்கள்மீது தொடர்ந்தும் சுமைகள் திணிக்கப்படுமானால் இந்த அரசுக்கு எதிராக நாமும் வீதியில் இறங்குவோம். யாத்திரை செல்வோம். இந்த அரசு வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்துவோம்.
எனவே, நாட்டில் ஆட்சி முகாமைத்துவத்தையும், கண்காணிப்பையும் மீண்டும் பொறுப்பேற்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கின்றோம். ஜனாதிபதி பதவியில் கோத்தாபய இருக்கட்டும். பஸில் ராஜபக்சவுக்கு நிதி அமைச்சு அல்லாமல், பிரிதொரு அபிவிருத்தி அமைச்சு பதவியை வழங்கலாம்.
இம்மாதம் 31 ஆம் திகதி மகாசங்கத்தினர் ஒன்றுகூடவுள்ளோம். இதன்போது அரசு தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்.” – என்றார்.