ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் ( வயது – 52) நேற்று காலமானார். தாய்லாந்தில் ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஷேன் வோர்னின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களுள் அவரும் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.
