அரச குடியிருப்புகளை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ இல்லங்களில் இதுவரை 14 மாத்திரமே கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கத்தில் பதவியிலிருந்த 28 அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இல்லங்களை கையளிக்கும் முன்னர் அதன் மின்சார மற்றும் நீர்க்கட்டணங்களை செலுத்தியிருக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டணங்கள் செலுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மாத்திரமே பொறுப்பேற்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.










