அர்ச்சுனாமீது ஐக்கிய மக்கள் சக்தியும் கழுகுப்பார்வை

புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பின்புலத்தில் இருப்பது யார்? அர்ச்சுனாவின் செயற்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கூறியவை வருமாறு,

” நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அறியாமையால்தான் சபையில் அப்படி செயற்பட்டார் என ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் அவர் திட்டமிட்ட அடிப்படையிலேயே அவ்வாறு செயல்பட்டிருக்கக்கூடும் என தற்போது தெரிகின்றது.

அவர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரின் நடத்தை தொடர்பில் நாம் தொடர்ந்து கண்காணிப்போம். அவரின் பின்புலம் என்னவென்பது பற்றியும், அவர் யாருக்காக செயற்படுகின்றார் என்பது குறித்தும் ஆராயப்படும்.

புலிகளுக்காகவும் அவர் கதைத்துள்ளார். எனவே, அவரின் நோக்கம் என்னவென்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும். அவர் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles