தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அவசரகால சட்டம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
அத்துடன், ஊடகங்களை அடக்கி ஆளவும் முற்படவில்லை எனவும் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் உரையாற்றுகையில் கூறினார்.
“ பேரிடருக்கு பின்னரே நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தடையாக உள்ள காரணிகளை நிவர்த்தி செய்வதற்காகவே அச்சட்டம் வந்தது. எனவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை தவறாக எமது அரசாங்கம் பயன்படுத்தவில்லை.
கடந்த ஆட்சிகாலங்களில்தான் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமறை கட்டவிழ்த்துவிடப்பட்டன. எம்மீது ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்தால்கூட அவை பற்றி நாம் கவலை அடையமாட்டோம்;. ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்.” எனவும் அமைச்சர் லால்காந்த குறிப்பிட்டார்.
