பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையின் பதிலை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றுவதை தடுத்து உயர்நீதிமன்றத்தினால் இன்று(24) இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










