அவிசாவளை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (வயது – 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவிசாவளை – இரத்தினபுரி பிரதான வீதியின் மாதொல பகுதியிலுள்ள இரும்பு பொருள் சேகரிப்பு நிலையமொன்றிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.