அஸ்வெசும குறித்து ஆராய 10 பேரடங்கிய குழு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் அநீதி இழைக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு 10 பேரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித்த ஹேரத்தின் ஆலோசனைக்கிணங்கவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போது ஏற்பட்ட சிக்கல் நிலையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை இழந்த சமுர்த்தி பயனாளர்கள் குறித்து இந்த 10 பேரடங்கிய குழு பரிசீலிக்கவுள்ளது.

Related Articles

Latest Articles