‘அஸ்வெசும’ கொடுப்பனவுக்காக மஸ்கெலியாவில் வரிசை

‘அஸ்வெசும’ என்ற ஆறுதல் கொடுப்பனவை பெறுவதற்காக மஸ்கெரியா நகரில் உள்ள மக்கள் வங்கி, இலங்கை வங்கி என்பவற்றுக்கு இன்றைய தினமும் அஸ்வெசும பயனாளிகள் வருகை தந்திருந்தனர். இதனால் வரிசையும் ஏற்பட்டது.

இவ்வாறு வந்தவர்களில் சிலருக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும், இதனால் தாம் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக பயனாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

‘அஸ்வெசும’ கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியானவர்களுக்கு அரச வங்கிகளில் கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டுள்ளது. மேன்முறையீடுகளும் பரீசிலிக்கப்பட்டுவருகின்றது .

தகுதிபெறாத சிலர்கூட வங்கிகளுக்கு வந்துசெல்வதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles