அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுவருவதுடன், 2415/ 66 மற்றும் 2024.12.21 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இத்திட்டம் இறுதியாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் கீழ்வருமாறு திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.