ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்குகிறது இந்தியா

 

வான் ​பாது​காப்பு வழங்​கும் ஆகாஷ் ஏவு​கணை​களை பிரேசிலுக்கு இந்​தியா வழங்க உள்​ளது.

ஆகாஷ் ஏவு​கணை இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்ட வான் பாது​காப்பு அமைப்​பாகும். தரை​யில் இருந்து வான் இலக்​கு​களைத் துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும் திறன் கொண்​டது ஆகாஷ்.

இந்த ஏவு​கணை​கள் எதிரி நாடு​களின் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள், ட்ரோன்​களை வான்​வெளி​யிலேயே இடைமறித்து அழிக்​கும். இது​போன்ற ஏவு​கணை​களை வாங்க பல நாடு​களும் ஆர்​வம் காட்டி வரு​கின்​றன.

இந்​நிலை​யில், பிரேசிலும் இந்​தி​யா​வும் இருதரப்பு பாது​காப்​புத் துறை​யில் இணைந்து செயல்பட ஏற்​கெனவே முடி​வெடுத்​துள்​ளன. அதன் ஒரு கட்​ட​மாக ஆயுதங்​களை இணைந்து தயாரிக்க, மேம்​படுத்த இரு நாடு​களும் திட்​ட​மிட்​டுள்​ளன. இந்​நிலை​யில், இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட ஆகாஷ் ஏவு​கணை​களை பிரேசிலுக்கு வழங்க மத்​திய அரசு நேற்​று ​முன்​தினம் ஒப்​புதல் வழங்கி உள்​ளது.

பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்​மின், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ஜோஸ் முசியோ மான்​டீரோ பில்ஹோ ஆகியோர் டெல்லி வந்​துள்ளனர். மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங்கை அவர்​கள் நேற்​று ​முன்​தினம் சந்​தித்து இருதரப்பு பாது​காப்​புத் துறை​கள் இணைந்து மேற்​கொள்ள வேண்​டிய பணி​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தினர்.

இதுகுறித்து பாது​காப்​புத் துறை அதி​காரி​கள் கூறும்​போது, “இந்​தி​யா​வும் பிரேசிலும் பாது​காப்​புத் துறை​யில் இணைந்து செயல்பட உள்​ளன. அதற்​கேற்ப பிரேசிலுக்கு ஆகாஷ் ஏவு​கணைகளை இந்​தியா வழங்​கும். இந்த ஏவு​கணை​கள் எதிரி​களின் போர் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள், ட்ரோன்​களை வான்​வெளி​யில் 25 கி.மீ. தூரத்​திலேயே தாக்கி அழிக்​கும்” என்​றனர்.

Related Articles

Latest Articles