ஆசியக் கிண்ணம் யாருக்கு? இன்றிரவு சமர்!

ஆசியக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

15 ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இலங்கை கடைசியாக தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆசியக்கிண்ண தொடரில் சுப்பர் – 04 சுற்றில் இறுதியாக நடந்த போட்டியில் பாகிஸ்தானை, இலங்கை இலகுவாக வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles