ஆசியக் கிண்ணம் வென்றது இலங்கை மகளிர் அணி!

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றிவாகை சூடியது.

தம்புள்ளையில் இன்று மாலை நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 166 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணியின் சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 69 ஓட்டங்களையும், அணித்தலைவரி சமரி அத்தப்பத்து 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

Related Articles

Latest Articles