ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், தற்போதைய நிலையில் அந்த மாணவி பெற்ற சர்வதேச வெற்றி நாட்டுக்கு மிகவும் மகத்தானது எனவும் தெரிவித்தார்.










