ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஆடையில் – சீருடையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது- கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று மீண்டும் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ‘ஆடை’ விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.










