‘ஆசை நாயகியை சந்திக்க சென்ற நிழல் உலக தாதா சன்ஷைன் சுத்தா சுட்டுக்கொலை’

பாதாள உலகக் குழுவை சேர்ந்த சன்ஷைன் சுத்தா என்றழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா, சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை – கொட்டவில பகுதியில் வைத்தே இன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிழல் உலக தாதா மாகந்துரே மதுசின் நெருங்கிய சகாவாக சன்ஷைன் சுத்தா இருந்துள்ளார்.

மாகந்துரே மதுஷால் டுபாயில் நடத்தப்பட்ட விருந்துபச்சாரத்தில் அவர் பங்கேற்றிருந்தார். அங்கு கைதான நிலையில் நாடுகடத்தப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.சன்ஷைன் சுத்தாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

29 வயதான சன்ஷைன் சுத்தாவுக்கு ஒரு குழந்தை உள்ளது.

அத்துடன், வெலிகம பகுதியிலுள்ள பெண்ணொருவருடன் இவர் கள்ளத் தொடர்பை பேணிவந்துள்ளார். இன்று அப்பெண்ணின் வீட்டுக்குசென்று திரும்பும்வழியிலேயே அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

சன்ஷைன் சுத்தா கள்ளத்தொடர்பு வைத்திருந்தார் எனக் கூறப்படும் பெண்ணின் கணவருக்கும், சுத்தாவுக்குமிடையில் அண்மையில் வீதியில் வைத்து கடும் வாக்கு வாதமும் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் விசாரணைகள் தொடர்கின்றன.

Related Articles

Latest Articles