ஆட்சியை பிடிப்பதற்காக 2019 இல் அரங்கேற்றிய ‘இனவாத’ நாடகத்தின் 2ஆவது பாகத்தை தற்போது அரங்கேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.
” 13 என்கின்றனர், 13 பிளஸ் என்கின்றனர். இவை யாவும் போலியான வாக்குறுதிகளாகவே உள்ளன. ஜனாதிபதி கனவில் உள்ள சிலர், தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்ளவும், சுகபோக வாழ்வுக்காகவும் மக்களை ஏமாற்றுவதற்கு முற்படுகின்றனர்.
2019 இல மக்களை எவ்வாறு ஏமாற்றி ஆட்சியை பிடித்தார்களோ அதன் 2ஆம் பாகத்தை அரங்கேற்றிவருகின்றனர். இனவாத ரீதியிலான பிரசாரங்கள் இதன் ஓர் அங்கமாகும்.
இனவாதம், மதவாதம் பரப்பி ஆட்சியை பிடித்தவர்களை மக்கள் விரட்டியடித்தனர் என்பதை நினைவில் வைத்து செயற்பட்டால் சிறந்தது.” – என்றார் சஜித்.
